Department Of Tamil
About the Department
ஜி.டி.என்.கலைக்கல்லூரி தொடங்கப்பட்ட 1964 ஆம் ஆண்டு அடிப்படைத் தமிழ்கற்பிக்கும் பொருட்டு தமிழ்த்துறையும் ஆரம்பிக்கப்பட்டது. 5 பேராசிரியர்களைக் கொண்டு பகுதி- 1 தமிழ் வகுப்புகளில் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் வளர்த்து வந்த தமிழ்த்துறை,2013 ஆம் ஆண்டில் இளங்கலைத் தமிழ் வகுப்பையும் 2016ல் முதுகலைத் தமிழ் வகுப்பையும் தொடங்கி தனது தமிழ்ப்பணியை வளர்த்துக் கொண்டது. தமிழ் இலக்கிய ஆய்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் 2018ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர், ஆய்வியல் அறிஞர் பட்டப்பிரிவுகள் தொடங்கப்பட்டு இன்று ஆராய்ச்சித்துறையாக வளர்ந்துள்ளது.இளங்கலைத் தமிழில் 200 மாணவர்களையும் முனைவர் பட்டப்படிப்பில் மூன்று மாணவர்களையும் கொண்டு, 20 பேராசிரியர்களால் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்த்துறை. இத்துறைப் பேராசிரியர்கள் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் ஆய்விதழ்களில் தரமான ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பகுதி - 1 தமிழ்ப்பாடப் புத்தகங்களையும், முதன்மைப் பாடத்திற்கான பாடப் புத்தகங்களையும் துறைப்பேராசிரியர்களே வடிவமைத்துத் துறையை வளப்படுத்தி வருகின்றனர். தமிழ்த்துறையில் ‘தமிழ் இலக்கியக்களம்’ தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்றுவரை பல்வேறு பயிற்சிப் பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது. பல்லாற்றல் திறன் வளர்ப்புப் போட்டிகளையும் கலைநிகழ்ச்சிகளையும் மாணவர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது. மாணவர்களின் படைப்புகள் அடங்கிய கைப்பிரதியான ‘பூச்செண்டு’ இதழை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம்ஆகியவற்றின் நிதிநல்கையுடன் நான்கு பயிலரங்குகளை நடத்தியுள்ளது . திண்டுக்கல் கம்பன் கழகத்தின் நிதி உதவியுடன் ஒரு தேசியக்கருத்தரங்கை நடத்தியுள்ளது. மலேசியா தமிழ்க்கல்வியாளர் பேரவை மற்றும் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றோடு இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியுள்ளது. மாணவர்களிடம் தமிழ்க்கணினித் திறனை வளர்க்கும் வகையில் 2016ஆம் ஆண்டு‘கணித்தமிழ் பேரவை’ தொடங்கப்பட்டு 4 பயிற்சிப் பட்டறைகளையும் ஒரு கருத்தரங்கையும் நடத்தியுள்ளது. தமிழ்த்துறையின் சார்பாக வட்ட அளவில் தொடங்கிதேசிய, சர்வதேச அளவில் நடைபெறக்கூடிய பல்வேறு போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளில் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடி கல்லூரிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.