Vision
தரமான தமிழ்க்கல்வியின் வழித் தமிழ்மொழி உணர்வும், கலை, இலக்கியத் திறனாய்வுப் பார்வையும், சமூக அக்கறையும் மானுட விழுமியங்களைப் போற்றும் எண்ணமும் வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்ட திறன்மிக்க சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.
Mission
தமிழ்மொழியில் ஆளுமையும் தமிழரின் கலை இலக்கிய வடிவங்களைத் திறனாய்வு
முறையில் அணுகும் பார்வையும் கைவரப்பெற்ற ஆற்றல் மிக்க மாணவர் சமுதாயத்தை
உருவாக்குதல்.
இலக்கியங்களின் வழி காரண, காரியத் தொடர்புடன் சிந்திக்கும் ஆற்றலையும் மொழி
ஆளுமையையும் வளர்த்தல்.
கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் போன்ற போட்டிகளைத் தொடர்ச்சியாக நடத்தி
மாணவர்களின் படைப்பாக்கத் திறனையும் ஆய்வுத் திறனையும் மேம்படுத்தி சிறந்த
படைபாளுமைகளை உருவாக்குதல்.
போட்டித்தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்துதல். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறைகளில்
வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்.
வரலாறு, தத்துவம், நாட்டுப்புறவியல், ஊடகவியல் உள்ளிட்ட துறைகளுடனான தமிழ்
மொழிக்குள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளும் வகையில் பிறதுறைகள் சார்ந்த அடிப்படைக்
கூறுகளைப் பயிற்றுவித்தல்.